சுடச்சுட

    

    உயர் அழுத்த மின்சாரம்: டி.வி.களை சாலையில் வைத்து முறையீடு

    By நாமக்கல்  |   Published on : 21st November 2014 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உயர் அழுத்த மின்சாரத்தால், வேட்டம்பாடியில் தொலைக்காட்சிப் பெட்டிகள், மின் விசிறிகள் சேதமடைந்ததை அடுத்து, மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி, சாலையில் சேதமடைந்த பொருள்களை வைத்து வியாழக்கிழமை கிராம மக்கள் முறையிட்டனர்.

    நாமக்கல் அருகே, வேட்டம்பாடி அருந்ததியர் காலனியில் சுமார் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்புகளின் மின் இணைப்பில் பழுது ஏற்பட்டு, கடந்த சில நாள்களாக உயர் அழுத்த மின்சாரம் வருகிறது. இதனால், வீடுகளில் உள்ள மின் விளக்குகள், மின் விசிறிகள் சேதடைந்து வருகின்றன. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

    இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மின் இணைப்பில் திடீரென உயர் அழுத்த மின்சாரம் வந்ததால், பல வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. ஓடிக்கொண்டிருந்த மின் விசிறிகள், தரையில் விழுந்து சேதமடைந்தன. இதனால், அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சேதமடைந்த பொருள்களை அங்குள்ள சாலையில் வைத்து அந்தப் பகுதி மக்கள் முறையிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள், உடனடியாக வந்து, அங்குள்ள மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை சீரமைத்தனர்.

    இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி கூறியது:

    உயர் அழுத்த மின்சாரம் வருவதால், வீடுகளில் உள்ள பல்புகள் அதிக பிரகாசமாக எரிகிறது. இதனால், கண் கூசுகிறது. தொடர்ந்து, மின் விளக்குகள் சேதமடைகின்றன என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai