சுடச்சுட

    

    கல்விக் கடன் வழங்கும் முகாம் விழிப்புணர்வு பிரசாரம்

    By ராசிபுரம்  |   Published on : 21st November 2014 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரத்தில் நகராட்சி சார்பில், கல்விக் கடன் வழங்குவது குறித்து விழிப்புணர்வு பிரசார முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்ட நிர்வாகம், முன்னோடி வங்கி சார்பில், நாமக்கல் தெற்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (நவ.22) கல்விக் கடன் வழங்குவதற்கான பதிவு முகாம் நடைபெற உள்ளது. இதில், மருத்துவம், பொறியியல், கால்நடை, பட்டப்படிப்பு, எம்.பி.ஏ. படிக்கும் மாணவ, மாணவிகள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு கல்விக் கடன் பெற பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

    மேலும், இதுகுறித்து, அனைத்துப் பகுதி மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இதன்படி, ராசிபுரம் நகராட்சி சார்பில், கல்விக் கடன் வழங்குவது தொடர்பான பதிவு முகாம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மாரியம்மன் கோயில் முன்பு புதன்கிழமை நடைபெற்றது.

    நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம், ஆணையர் பெ.வே.சந்திரசேகரன் ஆகியோர் இதில் பங்கேற்று, பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகளிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். இதில், நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.வெங்கடாஜலம், துப்புரவு அலுவலர் ஆர்.செந்தில்குமார், நகர்மன்ற உறுப்பினர் ஸ்ரீதர் உள்பட பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai