சுடச்சுட

    

    கொக்கராயன்பேட்டையில் கால்நடை சிகிச்சை முகாம்

    By நாமக்கல்  |   Published on : 21st November 2014 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, கொக்கராயன்பேட்டையில் அண்மையில் நடைபெற்ற கால்நடை சிகிச்சை முகாமில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதற்கு கூட்டுறவு ஒன்றியத் தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். டி.சி.எம்.எஸ்., தலைவர் கந்தசாமி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் செந்தில், சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் சின்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், குடல்புழு நீக்கம், மலடு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் கால்நடைகளுக்கு மேற்கொள்ளப்பட்டன. ஏராளமான விவசாயிகள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து சிகிச்சை பெற்றுச் சென்றனர். அதில், 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 2013-14ஆம் ஆண்டில் அதிக அளவு பால் வழங்கிய உறுப்பினர்கள், சிறந்த பசுவைப் பராமரித்து வரும் உறுப்பினர்கள், சிறந்த கன்றுக் குட்டியைப் பராமரிக்கும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு தொழில் துறை அமைச்சர் தங்கமணி பரிசு வழங்கிப் பாராட்டினார்.

    சேலம் பால் பண்ணை துணை பொதுமேலாளர் பாண்டியன், உதவிப் பொதுமேலாளர் சுந்தரேசன், துணைப் பதிவாளர் தேவகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai