சுடச்சுட

    

    கொல்லிமலை தின்னனூர்நாடு கிராமத்தை தத்தெடுத்தார் நாமக்கல் எம்.பி.

    By நாமக்கல்  |   Published on : 21st November 2014 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொல்லிமலையில் உள்ள தின்னனூர் நாடு மலைக் கிராமத்தை நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் மத்திய அரசின் உத்திரவின்பேரில் தத்தெடுத்தார்.

    மத்திய அரசின் கிராமபுற வளர்ச்சித் துறை சார்பில், பாரத பிரதமரின் சன்சாடு ஆதர்ஸ் கிராம யோஜனா என்ற திட்டத்தின் கீழ், அனைத்து மக்களவை உறுப்பினர்களும் அந்த தொகுதியில் ஏதாவது ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. தத்தெடுக்கும் கிராமத்தில் மக்கள் தொகை மூவாயிரத்திலிருந்து, ஐந்தாயிரத்துக்குள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதன்படி, நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், கொல்லிமலையில் உள்ள தின்னனூர் நாடு கிராமத்தை தத்தெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வியாழக்கிழமை கூறியது:

    தின்னனூர் நாடு கிராமத்தை தத்தெடுத்து பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டேன். அந்தக் கிராமத்தில் வங்கி, அஞ்சல் நிலையம், அனைத்து வீடுகளிலும் கழிப்பறை, சுகாதாரத்தை மேம்படுத்தவும், தெருவிளக்கு, கழிவுநீர் வாய்கால், சாலை, போக்குவரத்து வசதி, அந்தக் கிராமத்துக்கு என தனியாகக் குடிநீர்த் திட்டம், பள்ளிகள் சீரமைப்பு உள்ளிட்ட அனைத்து வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

    கிராமத்தில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வங்கி கடனுதவி வழங்குவது, கூட்டுறவு பால்பண்ணை அமைப்பது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும். மொத்தத்தில் அந்த கிராமம் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாறிவிடும். இந்தப் பணிகளுக்கு மத்திய அரசு, மாவட்ட நிர்வாகம் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யும். வளர்ச்சிப் பணிகளை கண்காணிப்பது என்னுடைய பணியாகும். தத்தெடுக்கப்பட்டுள்ள கிராமத்துக்கு மத்திய அரசு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து, வளர்ச்சிப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்த்திருக்கிறேன் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai