சுடச்சுட

  

  நாமக்கல்லில் மின் கட்டணம் செலுத்த புதிய வசதி

  By நாமக்கல்  |   Published on : 21st November 2014 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் உள்பட தமிழகம் முழுவதும் 110 நகரங்களில் இருந்து மின்சார கட்டணத்தை செலுத்தும் புதிய வசதியை தமிழ்நாடு மின் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

  இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மானக் கழகத்தின் நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் சொ.சந்தானம் வெளியிட்ட செய்திக்

  குறிப்பு:

  தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் 9 மண்டலங்களாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு மண்டலத்தின் தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் தங்களது மண்டலத்தில் உள்ள எந்தப் பிரிவு அலுவலகத்திலும் மின் கட்டணத்தைச் செலுத்தும் வசதி கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  தற்போது மின் தொடர் மூலமாக ஏற்படும் தொழில்நுட்ப, வணிக விரயங்களைக் கண்டறிய, மறு சீரமைக்கப்பட்ட மின் வளர்ச்சி, சீர்திருத்தத் திட்டம் என்ற புதிய திட்டம் மூலம் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் 110 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

  இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நுகர்வோர்கள் சம்பந்தப்பட்ட சேவைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட உள்ளதால், இதில் மின் கட்டணம் செலுத்தும் சேவைகளும் அடங்கும். இதனால், இந்தத் திட்டத்தின் கீழ் வரும் நகரங்களில் ஏற்கெனவே உள்ள மின் கட்டணம் செலுத்தும் வசதி தாற்காலிகமாக நிறுத்தப்படும்.

  இதன்படி, திருச்செங்கோடு சென்ட்ரல், தெற்கு, வடக்கு, கூட்டப்பள்ளி, காளிப்பட்டி, மல்லசமுத்திரம் பிரிவுகளில் உள்ள மின்நுகர்வோருக்கு மட்டும் ஏற்கனவே மண்டலம் எங்கும் மின்கட்டணம் செலுத்தும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள இணையதளம், வங்கிகள், தபால் நிலையங்கள் வழியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களுக்கான மின் கட்டணங்களைச் செலுத்தும் வசதி தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai