சுடச்சுட

  

  கரும்புக்கான விலையை அறிவிக்கக் கோரி டிச.15-இல் உண்ணாவிரதப் போராட்டம்

  By நாமக்கல்,  |   Published on : 22nd November 2014 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நடப்பு பருவ கரும்பு சாகுபடிக்கு விலை அறிவிக்க வலியுறுத்தி, வரும் டிசம்பர் 15ஆம் தேதி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதென கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

  தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கமிட்டிக் கூட்டம் மோகனூரில் அண்மையில் நடைபெற்றது. மணம்பள்ளி பெருமாள் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச்செயலாளர் ரவீந்திரன், நல்லாக் கவுண்டர், பெருமாள், ஜெயக்குமார், தங்கவேல் உள்ளிட்ட பலர் பேசினர்.

  வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். விவசாயிகள் அனுப்பும் கரும்புகளை உடனுக்குடன் எடை போட்டு அனுப்ப வேண்டும். 2014-2015ஆம் பருவத்துக்கான கரும்பு அரவை தொடங்கியுள்ளது.

  ஆனால், இதுவரை கரும்புக்கு உரிய விலை அறிவிக்காமல் மாநில அரசு காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, நடப்பு பருவ கரும்பு சாகுபடிக்கு விலை அறிவிக்க வலியுறுத்தி, வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai