சுடச்சுட

    

    சாரண,சாரணீய இயக்கம் சார்பில் விருது வழங்கும் விழா

    By பரமத்திவேலூர்  |   Published on : 22nd November 2014 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளியில் மாவட்ட சாரண, சாரணீய இயக்கத்தின் சார்பில், சதுர்த்த சரண், ஹீராக்பங்க் விருது வழங்கும் விழா வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் ரவி தலைமை வகித்தார். பொருளாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். எஸ்.கே.வி. வித்யாஸ்ரம் பள்ளியின் முதல்வர் யஷ்வந்த் வரவேற்றுப் பேசினார். விழாவில், நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோபிதாஸ் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான சதுர்த்த சரண் விருதையும், மாணவிகளுக்கான ஹீராக்பங்க் விருதையும் வழங்கினார்.

    விழாவில், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பாபு, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர், சாரண,சாரணீய இயக்கத்தின் செயலர் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai