சுடச்சுட

    

    நாமக்கல், நாமகிரிப்பேட்டை பகுதியில் செயல்படும் ஜவ்வரிசி ஆலைகளை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

    நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள், நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி பகுதியில் செயல்படும் 19 ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். அதில், பத்து ஆலைகளின் உணவு மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    ஜவ்வரிசி தயாரிப்பு இடங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றி, உணவுப் பொருள்களை தயார் செய்ய வேண்டும். விதிமுறை மீறி செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

    உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நரசிம்மன், ராமசாமி, சிவசுப்பிரமணியம், ராமச்சந்திரன், மாதேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai