சுடச்சுட

    

    நவ. 25-இல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

    By நாமக்கல்,  |   Published on : 22nd November 2014 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 25ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், வரும் 25ம் தேதி, காலை 11.30 மணிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், சமையல் எரிவாயு நிறுவனப் பிரதிநிதிகள், முகவர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட சமையல் எரிவாயு நுகர்வோர், சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள், ஆலோசனை, பிரச்னை குறித்து, கூட்டத்தில் எழுத்துப் பூர்வமாகத் தெரிவிக்கலாம். இந்த வாய்ப்பை நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ள

    வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai