சுடச்சுட

  

  விபத்தில் உயிரிழந்தவருக்கு நஷ்டஈடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவுப்படி நாமக்கல்லில் அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

  ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே ராமநாயக்கன்பாளையத்தைச் சேர்நதவர் தேவராஜ் (48). கொடுமுடி அருகே மதுரை கோட்ட அரசுப் பேருந்து மோதியதில், கடந்த 21-7-2005-இல் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மனைவி சுந்தரி, மகள் பார்வதி, தாய் கங்காதேவி ஆகியோர் இழப்பீடு கேட்டு, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

  அதன் அடிப்படையில், நீதிமன்றம் ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 100 இழப்பீடு வழங்க கடந்த 2006 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதை வழங்காமல் போக்குவரத்துக் கழகம் காலதாமதப்படுத்தியதால், சுந்தரி அதே நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனுத் தாக்கல் செய்தார். அதன் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், மதுரை கோட்ட அரசுப் பேருந்தை ஜப்தி செய்து, பாதிக்கப்பட்ட சுந்தரிக்கு ரூ.4.8 லட்சம் வழங்க உத்தரவிட்டது.

  இந்த நிலையில், நாமக்கல்லிலிருந்து மதுரைக்கு செல்வதற்காக நாமக்கல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மதுரை கோட்ட அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai