சுடச்சுட

    

    ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கலை கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில், என்சிசி தினத்தைத் தொடர்ந்து, மரக்கன்றுகள் நடுதல், சுகாதாரத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி, தூய்மைப் பணி போன்றவை சனிக்கிழமை நடைபெற்றன.

    இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் இயற்கை சூழலைப் பாதுகாக்கும் வகையில், மரக்கன்றுகள் நடுதல், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். முன்னதாக, இந்தப் பணிகளை தொடக்கிவைத்த கல்லூரி முதல்வர் டி.ஆர்.கணேசன், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் தூய்மைப்படுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியையும் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.

    பேரணியில் பங்கேற்ற என்சிசி மாணவர்கள், தூய்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முழக்கமிட்டவாறு முக்கிய பகுதிகளில் சென்றனர். பின்னர், கல்லூரி வளாகம், பேருந்து நிறுத்தம் போன்ற பகுதிகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பேரணியில், கல்லூரி என்சிசி அலுவலர் கேப்டன் ஆர்.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai