சுடச்சுட

  

  தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் நிரந்தர வாக்கு வங்கி கிடையாது

  By சேலம்  |   Published on : 23rd November 2014 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் நிரந்தர வாக்கு வங்கி கிடையாது என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

  சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியது:

  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை உணர்ந்து காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற வாசனைப் பற்றி பேசும் அளவுக்கு அவர் பெரிய மனிதர் அல்ல.

  காங்கிரஸýக்கு 4 சத வாக்கு வங்கிதான் இருக்கிறது எனப் பத்திரிகைகள் எழுதுகின்றன. அதைக் கண்டு பயப்பட வேண்டாம். சோர்வடைந்து விடாதீர்கள். தமிழகத்தைப் பொருத்தவரையில் எந்தக் கட்சிக்கும், எப்போதும் நிரந்தர வாக்கு வங்கி இருந்தது கிடையாது.

  காமராஜருக்குப் பிறகு வந்த எம்ஜிஆருக்கு 40 சத வாக்கு வங்கி இருந்தது. ஆனால். மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சித் தோல்வி அடைந்தது. மீண்டும் 6 மாதங்கள் கழித்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார்.

  எனவே, வாக்கு சதவீதத்தைக் கண்டு மயங்கிவிட வேண்டாம். அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தோல்வியைச் சந்தித்துள்ளன.

  4 சத வாக்கு வங்கியை  2016-இல் 40 சத வாக்கு வங்கியாக மாற்றி வெற்றி பெற வேண்டும்.

  தமிழ்நாட்டில் 1967-இல் திமுக எப்படி ஆட்சிக்கு வந்ததோ அதுபோன்றுதான், தற்போது பாஜகவும் மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ளது. மோடியின் பொய் பிரசாரத்தால் மக்கள் மயங்கி விட்டார்கள்.

  விவசாயிகள், நெசவாளர்களுக்கு பாஜக அரசு எதையும் செய்யவில்லை. நாட்டை ஆளத் தகுதியில்லாத நிலையில் வெளிநாட்டு வாழ் இந்தியராக மோடி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

  ஆனால், மோடியின் செயலால் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்கள் பாதிக்கப்படும் நிலைதான் உள்ளது.

  தமிழக பிரச்னைகள் தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டே இருக்கிறார். கோடிக்கணக்கான மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண கடிதம் எழுதுவது மட்டுமே தீர்வாக அமையுமா? என்பதை யோசிக்க வேண்டும். பிரச்னைகளுக்கு தீர்வு காண பிரதமரை பன்னீர்செல்வம் சந்திக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.

  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் உள்பட பலர் பேசினர்.

  சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயப்பிரகாஷ், மாவட்டத் தலைவர்கள் செல்வராஜ் (கிழக்கு), எடப்பாடி கோபால் (மேற்கு), அகில இந்திய செயலர்கள் செல்லக்குமார், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கோபிநாத் எம்எல்ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. குட்டப்பட்டி நாராயணன், நிர்வாகிகள் மோகன் குமாரமங்கலம், ராம சுகந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai