சுடச்சுட

  

  தேசிய பெண்கள் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

  By ராசிபுரம்  |   Published on : 23rd November 2014 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.50 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை, கலையரங்கு கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  மாநிலங்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சத்தில் 4 கூடுதல் வகுப்பறை கட்டடம், கலையரங்கக் கட்டடம் கட்டுவதற்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் நிதி ஒதுக்கியிருந்தார். இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், பள்ளிச் செயலாளர் லட்சுமி சண்முகம் தலைமை வகித்தார். பள்ளிக் கட்டடக் குழுத் தலைவர் எம்.எஸ்.எஸ்.ரத்தினம் வரவேற்றார். பள்ளித் தலைவர் கோமதிசுவாமிநாதன், இயக்குநர் எஸ்.ரவிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டடங்களைத் திறந்து வைத்த கே.பி.ராமலிங்கம் எம்.பி பேசியது:

  நாட்டின் எதிர்காலம் மாணவ, மாணவியர் கையில்தான் உள்ளது. பெண்கள் தான் சமுதாயம், சமுதாயம்தான் பெண்கள். கலாசாரம், தமிழ்ப் பண்பாடு, ஒழுக்கம், சிறந்த கல்வி, தமிழின நற்பண்பு, நன்னடத்தை உள்ளிட்ட அம்சங்கள் அனைத்தும் மாணவியரிடம் மட்டுமே காணப்படும். குடும்பப் பொறுப்பை ஏற்கும் பெண்களால்தான் பெண் இனமே பெருமைபட முடியும். நல்ல குடும்பத்தை வழி நடத்திட சேமிப்பு, சிந்திக்கும் ஆற்றல், அறிவாற்றல் போன்றவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தத் துறையிலும் பெண்கள் சிறந்த விளங்க வேண்டும். துணிச்சலுடன் செயல்பட்டு, சாவல்களைச் சந்தித்து, சாதிக்க வேண்டும் என்றார்.

  விழாவில், வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலாளர் என்.மாணிக்கம், முன்னாள் நகர்மன்றத் துணை தலைவர் எஸ்.ரங்கசாமி, அரிமா சங்கத் தலைவர் கே.ராஜாராம், உதவித் தலைவர் எம்.ராகவன், மணி ஃபீட்ஸ் அதிபர் வெங்கடாஜலம், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், ஆடிட்டர் புருஷோத்தமன், நடராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai