சுடச்சுட

    

    பொய்யேரி பகுதியில் பரவும் மர்மக் காய்ச்சல்

    By பரமத்திவேலூர்  |   Published on : 23rd November 2014 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் அருகே உள்ள பொய்யேரி பகுதியில் வேகமாக மர்மக் காய்ச்சல் பரவுகிறது. இதுவரை சுமார் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து, நல்லூர், பாலப்பட்டி ஆகிய வட்டார மருத்துவர்கள் கருணாநிதி, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தீவிர பரிசோதனை, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், கொசு உற்பத்தியாவது குறித்தும், அதைத் தடுக்கும் விதம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுகுறித்து பாலப்பட்டி வட்டார மருத்துவர் கருணாநிதி கூறியதாவது:

    இந்தப் பகுதியில் உள்ளவர்களை பரிசோதனை செய்ததில் வைரஸ் காய்ச்சல் யாருக்கும் இல்லை. இது மழைக் காலங்களில் வரும் சாதாரண சளி, காய்ச்சல்தான். இதனால், யாரும் பயப்படத் தேவையில்லை. பொதுமக்கள் தங்களது இருப்பிடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என்றார்.

    ஓலப்பாளையம் ஊராட்சிமன்றப் பணியாளர்களும், சுகாதாரத் துறையினரும் இணைந்து, அந்தப் பகுதியில் டெங்கு, சிக்குன்

    குனியா, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகாதவாறு வீடுகள் தோறும் உள்ள தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தை ஊற்றினர். மழைநீர் தேங்கும் டயர், பழைய பொருள்கள் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai