சுடச்சுட

    

    2016-இல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும்

    By நாமக்கல்,  |   Published on : 23rd November 2014 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2016-இல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

    நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம், திருச்செங்கோடு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.வீ.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் செல்லக்குமார், மாவட்டத் தலைவர் செழியன், துணைத் தலைவர் பி.எ.சித்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது:

    தமிழகத்தில் காங்கிரஸின் சாதனைகளை சொல்லத் தவறியதால் 1967-இல் ஆட்சியைப் பறிகொடுத்தோம். இப்போது காங்கிரஸின் சாதனைகளை எடுத்துச் சொல்ல மறந்ததால் மத்தியில் ஆட்சியை இழந்தோம்.

    1960-இல் காங்கிரஸ் கொண்டு வந்த திட்டம்தான் தூய்மை இந்தியா திட்டம். இந்தத் திட்டத்தை தற்போது மோடி அறிவித்து தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.

    கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் முடக்கப்பட்டு இருந்தது. தமிழக மக்களைக் காப்பாற்ற, காங்கிரஸ் இழந்த பெருமையை மீட்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் அரசில் 10 ஆண்டுகள் பதவியில் இருந்த ஜி.கே.வாசன் எதுவுமே செய்யவில்லை. அவர் மிகப்பெரிய தலைவரின் மகன் என்பதற்காக சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் எதிர்க்க முடியுமா?.

    மரத்தில் இருந்து முறிந்து விழுந்த கிளை என ஜி.கே.வாசனை, ப.சிதம்பரம் விமர்சனம் செய்திருந்தார். என்னைப் பொருத்தவரை கிளை முறியவில்லை. இலைதான் உதிர்ந்தது. அதனால், காங்கிரஸ் கட்சிக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை.

    ஜி.கே.வாசன் ஆரம்பிக்கும் கட்சி 2016 தேர்தல் வரை நீடிக்குமா என சிலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் சொல்கிறேன், அந்தக் கட்சி திருச்சி கூட்டம் வரை நீடிப்பதே சந்தேகம்தான். 2016-இல் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். இதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai