சுடச்சுட

    

    தெருநாய்களுக்கு இனப் பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சை

    By குமாரபாளையம்  |   Published on : 24th November 2014 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையத்தில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெருத்த சிரமத்தை அளித்து வந்த தெருநாய்களின் இனப் பெருக்கத்தைத் தடுக்கும் வகையில், குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை, வெறிநாய்க்கடி தடுப்பூசி வழங்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கியது.

    குமாரபாளையம் நகரப் பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாகத் சுற்றித் திரிவதோடு, பாதசாரிகளையும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரைக் துரத்திக் கடிப்பதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதுகுறித்து, பொதுமக்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை கோரி வலியுறுத்தி வந்தனர்.

    இந்தநிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தெரு நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யும் வகையில் அறுவைச் சிகிச்சை, வெறிநோய் தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 658 நாய்கள் சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப்பட்டது.

    முதல் கட்டமாக, 50 நாய்கள் பிடிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தை நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் சனிக்கிழமை தொடக்கிவைத்தார். நகராட்சி ஆணையர் என்.சங்கரன், துப்புரவு அலுவலர் ஆர்.மணிவண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் சிங்காரவேலு, டி.சரவணன் உடனிருந்தனர்.

    தெருநாய்கள் பிடித்து வரப்பட்டு, ஆனங்கூர் பிரிவு அருகே கட்டப்பட்டுள்ள அரங்கில் இனப் பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சை செய்யப்படும். தொடர்ந்து, மூன்று நாள்கள் பராமரிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படும். இதற்காக, ஒரு நாய்க்கு ரூ.445 செலவிடப்படுகிறது. திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai