சுடச்சுட

    

    முன்மாதிரி கிராமமாக தின்னனூர் நாட்டை மாற்ற எம்.பி. உறுதி

    By ராசிபுரம்  |   Published on : 24th November 2014 03:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொல்லிமலையில் உள்ள தின்னனூர் நாடு மலைக்கிராமத்தை முன்மாதிரிக் கிராமமாக மாற்ற நாமக்கல் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் உறுதியளித்தார்.

    அனைத்து மக்களவை உறுப்பினர்களும் அந்தந்தத் தொகுதியில் ஏதாவது ஒரு கிராமத்தைத் தத்தெடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்திருந்தது. இதன்படி, நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், கொல்லிமலையில் 20 குக்கிராமங்களை உள்ளடங்கிய தின்னனூர் நாடு கிராமத்தைத் தத்தெடுத்துள்ளார்.

    திற்கு சென்ற பி.ஆர்.சுந்தரம் எம்பி., இது குறித்து தின்னனூர் நாடு கிராமத்தில் மலைக் கிராம மக்களிடம் இதனை அறிவித்தார்.

    மாவட்ட திட்ட முகமை அலுவலர் மாலதி, கொல்லிமலை ஊராட்சித் தலைவர் சி.சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சந்திரன், தின்னனூர் ஊராட்சித் தலைவர் சரோஜா சின்னுசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் மாதேஸ்வரி அண்ணாதுரை ஆகியோர் பி.ஆர்.சுந்தரத்துடன் சென்று மலைக் கிராம மக்களைச் சந்தித்து தேவையான அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டறிந்தனர்.

    தேவையான சாலை வசதிகள், காட்டாற்றுப் பாலம் அமைக்க வேண்டிய இடங்கள் போன்றவற்றையும் பி.ஆர்.சுந்தரம் பார்வையிட்டார். பின்னர் வங்கி, அஞ்சல் நிலையம், வீடுகள் தோறும் கழிப்பறை, சுகாதார மேம்பாடு, தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால், தடுப்பணைகள், போக்குவரத்து வசதி, குடிநீர்த் திட்டம், பள்ளிகள் சீரமைப்பு, பிஎஸ்என்எல். செல்போன் டவர் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்குவது, கூட்டுறவு பால் பண்ணை அமைப்பது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

    இக்கிராமத்தின் திட்டப் பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நிதி ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இக்கிராமத்தில் வளர்ச்சிப் பணிகள் விரைவில் துவங்கும் என்றும் பி.ஆர்.சுந்தரம் எம்.பி. தெரிவித்தார்.

    திட்டக்கிராய்பட்டி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிக்கு மலைக் கிராம பள்ளி மாணவ மாணவியர் சென்று வரும் வகையில் கட்டக்காபாறைப்பட்டி, எல்லைக்கிராய்பட்டி இடையேயும், மங்களம்பட்டி முதல் வாசலூர்பட்டி இடையேயும் பாலம் அமைக்க வேண்டும். தின்னசோலை கன்னிப்பாடி இடையே சாலை அமைக்க வேண்டும். அக்கரைவளவு முதல் நெடுங்குழிப்பட்டி இடையே 2 கி.மீ. தொலைவுக்கு இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை பொதுமக்கள் எம்.பி. பி.ஆர்.சுந்தரத்திடம் முன்வைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai