சுடச்சுட

    

    மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4.80 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

    By நாமக்கல்,  |   Published on : 24th November 2014 03:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாய் திட்டத்தின் கீழ் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 4.80 கோடியில், பல்வேறு அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி கூறினார்.

    மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், பின்னர் கூறியது:

    நாமக்கல் மாவட்டத்தில் குக்கிராமங்களும் மேம்படும் வகையில் குடிநீர், கழிப்பிடம், சாலை, மின் விளக்கு, மயான வசதி, இணைப்புச் சாலை உள்ளிட்ட ஏராளமான பணிகள், தாய் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படுகின்றன.

    மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் தாய் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 17.15 லட்சத்தில் 497 தெரு விளக்குகள், ரூ. 1.38 கோடியில் 95 கான்கிரீட் சாலை, ரூ. 36.92 லட்சத்தில் 15 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குடிநீர் குழாய் விஸ்தரிப்பு 32.96 லட்சத்தில் 11 புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் ரூ. 1.03 கோடியில் 13 மண் சாலைகளை தார்ச்சாலையாக மாற்றம், ரூ. 70.49 லட்சத்தில் ஆறு புதிய சாலைகள், ரூ. 14.37 லட்சத்தில் மூன்று இணைப்புச் சாலைகள், ரூ. 64.14 லட்சத்தில் 26 மயான மேம்பாடு, ரூ. 2.64 லட்சத்தில் இதரப் பணிகள் என மொத்தம் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 672-க்கும் மேற்பட்ட அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    தாய் திட்டத்தின் கீழ், நிகழ் நிதியாண்டில், 72.55 லட்சம் ரூபாய் மதிப்பில், 90-க்கும் மேற்பட்ட சாலை, தெருவிளக்கு, குடிநீர், சாக்கடை, மயானம் மேம்பாடு உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

    வளையப்பட்டியில் 8.17 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார்ச் சாலை அமைக்கும் பணி, வடக்குத் தெருவில் தாய் திட்டத்தின் கீழ் 5.23 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, 17.70 லட்சம் ரூபாய் மதிப்பில் மோகனூர் சாலை முதல் ஆரோக்ரா தோட்டம் வரை நடந்து வரும் தார்ச் சாலை பணி, அரசநத்தம், ராசிபாளையம் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வம், ராஜாமணி, பொறியாளர் சாந்தி, உதவிப் பொறியாளர் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai