சுடச்சுட

  

  ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி:பாதிக்கப்பட்டவர்கள் நூதனப் போராட்டம்

  By நாமக்கல்  |   Published on : 25th November 2014 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏலச்சீட்டு நடத்தி பணமோசடி செய்த பெண்ணின் வீட்டின் முன், பாதிக்கப்பட்ட பெண்கள் சமையல் செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  நாமக்கல் அருகே மோகனூர் வள்ளியம்மன் கோவில் காலனியைச் சேர்ந்தவர் செந்தில். லாரி உரிமையாளர். இவரது மனைவி சங்கீதா. இவர் இப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் பணம் வாங்கி ரூ.1 லட்சத்துக்கான ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.

  சீட்டு எடுத்த பலருக்கும் முழுமையாகப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மோகனூர் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் பணத்தை வாங்கி வரும்படி கூறிப் பல பெண்களை அவர்களின் கணவர்கள் வீட்டை விட்டு விரட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.

  இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் திங்கள்கிழமை காலையில் சங்கீதா விட்டு முன் திரண்டு சமையல் செய்து போராட்டம் நடத்தினர்.

  தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார், எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர். இதனையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai