சுடச்சுட

    

    நாமகிரிப்பேட்டை சுகாதார நிலையத்தைதரம் உயர்த்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

    By ராசிபுரம்  |   Published on : 25th November 2014 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமகிரிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    கட்சியின் நாமகிரிப்பேட்டை ஒன்றிய 4-வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    ஆர்.கதிரேசன், என்.கே.ரவிநாத் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.முத்துசாமி கொடியேற்றினார்.

    முள்ளுக்குறிச்சி கிளைச் செயலர் கே.சின்னுசாமி வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தங்கமணி மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார்.

    மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாமகிரிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும். மருத்துவர்கள் நோயாளிகளை முறையாகப் பரிசோதிக்க வேண்டும்.

    நாமகிரிப்பேட்டை நான்கு ரோடு தண்ணீர்பந்தல்காடு மாரியம்மன் கோயில் மெயின் ரோடு பகுதியில் தொடர் விபத்துகளைத் தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்.

    முறையான விசாரணை இல்லாமல் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித் தொகைகளை உண்மையான பயனாளிகளுக்கு உடனே வழங்க வேண்டும்.

    ராசிபுரம் முதல் பசுறுமலை அடிவாரம் வரை சீராப்பள்ளி, சின்னகாக்காவேரி, வெளóளக்கல்பட்டி, பாரதி நகர் வழியாக சென்று வந்த மினி பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொங்களம்மன் கோயில் முதல் ராசிபுரம் வரை காலை, மாலை இரு வேளையும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசுப் பேருந்து இயக்க வேண்டும்.

    ஆயில்பட்டி மற்றும் மெட்டாலா பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க வேண்டும்.

    புதுப்பட்டி முனியப்பன்புதூர் பகுதியில் இலவச பொதுக் கழிப்பிடம் கட்டித் தர வேண்டும். ஆயில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும்.

    நாரைக்கிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வேலை அறிக்கை மற்றும் வரவு, செலவை ஒன்றியச் செயலர் பி.செல்வராஜ் சமர்ப்பித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.டி.கண்ணன், சின்னுபெரியசாமி, ஜெ.பெருமாள், வி.பி.சபாபதி, எஸ்.சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கந்தசாமி நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai