சுடச்சுட

  

  மக்கள் குறைதீர் கூட்டத்தில் 1000 மனுக்கள் அளிப்பு

  By நாமக்கல்,  |   Published on : 25th November 2014 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 1003 மனுக்கள் பெறப்பட்டன.

  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.

  உதவித்தொகைகள், புதிய குடும்ப அட்டைகள், அடிப்படை வசதி, மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 1003 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களை உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஆட்சியர் உத்தரவிட்டார்.

  வழங்கல் துறையின் சார்பில் நாமக்கல் வட்டத்தைச் சேர்ந்த 8 பேர், ராசிபுரம் வட்டத்தைச் சேர்ந்த 40 பேர், பரமத்தி வேலூர் வட்டத்தைச் சேர்ந்த 30 பேர் என மொத்தம் 78 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளை ஆட்சியர் வழங்கினார்.

  மாவட்ட வருவாய் அலுவலர் வே.ரா. சுப்புலட்சுமி, தனித்துணை ஆட்சியர் (சிறப்புத் திட்டங்கள்) எஸ்.சூரியபிரகாஷ், நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலர் என்.ரத்தினம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் எஸ்.ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai