சுடச்சுட

  

  மனைப்பட்டா வழங்கக் கோரி முஸ்லிம் பெண்கள் மனு

  By நாமக்கல்  |   Published on : 25th November 2014 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள், தங்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  ராசிபுரம் ஜாகிர் உசேன் சாலையில் அரசு புறம்போக்கு இடத்தில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த 65-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பீடி சுற்றும் தொழில் மூலம், தினமும் ரூ.100-க்கும் குறைவாகவே கூலி கிடைப்பததால், குடும்பம் நடத்தவே சிரமப்படும் சூழலில் சொந்தமாக வீட்டு மனை வாங்க இயலவில்லை.

  இதனால் புறம்போக்கு நிலத்தில் சாலைகள் அமைத்துக் குடியிருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 20 முறை ஆட்சியர் அலுவலகத்திலும் அதிகாரிகளிடமும் மனுக் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த பொதுமக்கள் குறை கேட்புக் கூட்டத்தில் ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தியிடம், தங்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என பீடி சுற்றும் முஸ்லிம் மக்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பரமத்தி வேலூர்: பரமத்தி வேலூர் செட்டியார் தெருவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வருவதாகவும், கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவரும் தங்களுக்கு அரசு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai