ராசிபுரம் அரசுப் பள்ளி மாணவர் மாநிலப் போட்டிக்குத் தகுதி
By ராசிபுரம் | Published on : 25th November 2014 04:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஈரோடு மண்டல அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தேவா இரண்டாம் இடம் பெற்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான தடகளப்போட்டி ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடந்தது.
இப்போட்டியில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோபி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
ராசிபுரம் சிவானந்தாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எ.தேவா, 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உயரம் தாண்டுதலில் இரண்டாம் இடம் பிடித்தார். இதன் மூலம் அவர் மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் ப.விஜயகுமாரி, உதவித் தலைமையாசிரியர் வரதராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் என்.பி.ஜெகஜீவன், வெ.அங்காளபரமேஸ்வரி ஆகியோர் மாணவர் தேவாவைப் பாராட்டினர்.