சுடச்சுட

    

    விதிகளை மீறி இயக்கப்பட்ட 11 மணல் லாரிகள் பறிமுதல்

    By நாமக்கல்,  |   Published on : 25th November 2014 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல்லில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 11 மணல் லாரிகளை போக்குவரத்துத்துறை அலுவலர்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

    திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட காவிரி ஆற்றுப் பகுதியில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் நாமக்கல் வழியாக ஒசூர் வரை இயக்கப்படுகின்றன.

    நாமக்கல் நகர்ப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கனரக வாகனங்கள் வந்து செல்ல காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால், திருச்சியில் இருந்து வரும் மணல் லாரிகள், என்.புதுப்பட்டியில் இருந்து பிரிந்து மோகனூர் சாலை கணவாய்பட்டி வழியாக வள்ளிபுரம் தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்கின்றன.

    அதிக பாரத்தோடு வரும் மணல் லாரிகளால் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளன.

    இந்நிலையில், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரையில் நாமக்கல் நகர்ப் பகுதி வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் செல்கின்றன.

    பெருகி வரும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு இடையே குறுகிய சாலையில் வேகமாகச் செல்லும் மணல் லாரிகளால் தொடர்ந்து விபத்துகள் அதிகரித்து வருகின்றன. நவம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை மணல் லாரிகள் மோதி 7 பேர் பலியாகியுள்ளனர்.

    இதைதொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில், திங்கள்கிழமை காலை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கே.எஸ்.துரைசாமி, எ.கருப்பண்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் டி.தாமோதரன், ஆர்.பிரதீபா, டி.சண்முகானந்த், வி.கதிர்வேல் ஆகியோர் திருச்சி சாலை வேப்பநத்தம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சுமார் 45 மணல் லாரிகளைச் சோதனை செய்ததில், 11 மணல் லாரிகள் விதிமுறைகளை மீறி இயக்கியது தெரிய வந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டன.

    இதில் 2 லாரி ஓட்டுநர்கள் ஹெவி லைசன்ஸ் இல்லாமல் மணல் லாரி ஓட்டியது தெரியவந்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai