Enable Javscript for better performance
புறம்போக்கு நிலத்தை மீட்க  ஆட்சியரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    வகுரம்பட்டி ஊராட்சியில் தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ள புறம்போக்கு நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
     வகுரம்பட்டி ஊராட்சி 1-ஆவது வார்டு உறுப்பினர் பாலமுருகன் அப்பகுதி பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
     வகுரம்பட்டி ஊராட்சி 1-ஆவது வார்டு பகுதியில் சூரியன்கரட்டின் அருகே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
     ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம் அல்லது சமுதாயக் கூடம் கட்டித் தர வேண்டும்.
     இதுபோல் 45 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை இடித்து விட்டு, புதிய நீர்த்தேக்கத் தொட்டியை அமைத்துத் தர வேண்டும்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai