சுடச்சுட

    

    மருந்தியல் வாரவிழாவை முன்னிட்டு திருச்செங்கோட்டில் கல்லூரி மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடந்தது.
     திருச்செங்கோடு விவேகானந்தா பார்மஸி கல்லூரியில் 53-ஆ வது தேசிய மருந்தியல் வாரவிழா வியாழக்கிழமை துவங்கியது. தாளாளர் மு. கருணாநிதி, துவக்க விழாவுக்குத் தலைமை வகித்தார்.
     அறக்கட்டளைத் தலைவர் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்து விளக்கேற்றி வைத்தார். இயக்குநர்கள் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், டாக்டர் ராகநிதி அர்த்தநாரீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     சிறப்பு விருந்தினராக பசுமை பார்மசி நிறுவனங்களின் இயக்குனர் பனையப்பன் பங்கேற்று மருந்தாளுநர்களின் பணி பற்றி விளக்கிக் கூறினார். பார்மசி கல்லூரி முதல்வர் ஆனந்த தங்கதுரை வரவேற்றார். உதவிப் பேராசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
     மருந்தியல் வாரவிழாவின் ஒரு பகுதியாக பார்மசி கல்லூரி மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி திருச்செங்கோட்டில் நடந்தது.
     பேரணியை அரசு மருத்துவமனை முதன்மை மருந்தாளுனர் பி. ஜவஹர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். மாணவியர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தி வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது.
     மருந்தியல் வாரவிழாவை முன்னிட்டு மாணவியர் 25 பேர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரத்ததானமளித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai