Enable Javscript for better performance
மாணவர்களுக்கு திடக்கழிவு  மேலாண்மைப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களுக்கு திடக்கழிவு  மேலாண்மைப் பயிற்சி

    By  பரமத்திவேலூர்,  |   Published on : 26th November 2014 10:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் பள்ளியில் பயிலும் விவசாயப் பிரிவு மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சியளிக்கப்பட்டது.
     பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பை எனத் தனித்தனியாகப் பிரித்து பாவடித் தெருவில் உள்ள உரப்பூங்காவில் வைக்கப்படுகிறது.
     ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாணக்கரைசலும், நுண்ணுயிர் கலவையும் குப்பைகளில் கலக்கப்படுகிறது. சுமார் 30 நாள்களில் அக்குப்பை எருவாக மாற்றப்படுகிறது.
     இந்த எரு விவசாய நிலங்களுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைச் சேகரித்து அதைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவது எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
     வேலூர் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரமேஷ் பயிற்சியளித்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை விவசாய ஆசிரியர் குகநாதன் செய்திருந்தார்.
     வேலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட ஒரு வார்டைத் தத்தெடுத்து மாணவர்கள் மூலம் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக விவசாய ஆசிரியர் குகநாதன் தெரிவித்தார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai