சுடச்சுட

    

    ராசிபுரம் அருகே குடிசை வீடு தீப் பிடித்து எரிந்ததில் நகை, பணம் சேதமடைந்தது.

    ராசிபுரத்தை அடுத்துள்ள சிங்களாந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். காய்கறி வியாபாரி. இவர் தனது 3 மகன்களுடன் கூட்டுக் குடும்பமாகக் கூரை வீட்டில் வசித்து வந்தார். புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அந்தப் பகுதியில் மின்சாரம் தடைபட்டு, மீண்டும் மின்சாரம் வந்தவுடன் ஏதோ சப்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென்று கண்ணன் வீடு தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், தீ மளமளவென கூரை முழுவதும் பரவியது.

    உடனே ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், தீயணைப்புத் துறை அதிகாரி துரைசாமி தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தீ விபத்தில் நகைகள், பணம் உள்பட வீட்டிலிருந்த அனைத்துப் பொருள்களும் எரிந்து சேதமடைந்தன.

    இதன் மதிப்பு 2 லட்சத்துக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து பேளுகுறிச்சி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    நாமக்கல் நகரில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

    நாமக்கல் நகரில் முக்கியச் சாலைகளான திருச்சி, சேலம், துறையூர், மோகனூர் சேந்தமங்கலம் சாலை, பேருந்து நிலையம், பிரதான சாலை, கடைவீதி ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தன.

    இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்படி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நாமக்கல் நகராட்சி அலுவலர்கள், வருவாய்த் துறையினர், போலீஸார் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    கடைகளின் வெளியே அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை, சாலையின் மீது அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் தளம், கொட்டகை, விளம்பரப் பதாகைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.

    ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் இடித்துத் தள்ளப்பட்டன. இச்சம்பவத்தால் நகரில் பரபரப்பு காணப்பட்டது. திருச்சி சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவு மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது.

    நகரில் உள்ள பிரதான சாலைகளிலும் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai