சுடச்சுட

    

    குடியிருப்புப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

    By நாமக்கல்  |   Published on : 27th November 2014 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியிருப்புப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

    நாமக்கல் - பரமத்தி சாலை திருநீலகண்டர் தெருவில் தனியார் செல்போன் நிறுவனம் கோபுரம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழிதோண்டிய செல்போன் நிறுவனத்தினர் அடுத்த கட்டப் பணிகளைக் கடந்த 4-ஆம் தேதி தொடங்கினர்.

    இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள், பணியைத் தடுத்து நிறுத்திப் போராடி வருகின்றனர். இந்நிலையில், சந்தைப்பேட்டை புதூர் பொதுமக்கள் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் செவ்வாய்க்கிழமை மனு

    அளித்தனர்.

    அம்மனுவில், எங்கள் பகுதி குடியிருப்புகள் நிறைந்த பகுதி. மேலும் பல்வேறு மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் உள்ளன. இங்கு தனியார் செல்போன் கோபுரம் அமைக்க முயற்சித்து வருகின்றனர்.

    அந்தக் கோபுரம் அமைக்கப்பட்டால், அதன் கதிரியக்கம் காரணமாக குடியிருப்போர் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

    இதற்கு அப்பகுதியைத் சேர்ந்த அனைத்து மக்களும் ஆரம்ப காலம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஏற்கனவே எங்கள் பகுதி மக்கள் சாலைமறியல் செய்தபோது, காவல்துறையினர் இப்பணி தொடரப்படாது என உறுதி அளித்ததன் பேரில், அப்போராட்டத்தைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்தோம்.

    இந்தச் சூழ்நிலையில் மீண்டும் தனியார் செல்போன் நிறுவனத்தினர் பணியைத் தொடர உள்ளதாகத் தெரியவருகிறது. எனவே திருநீலகண்டர்தெரு பகுதியில் உள்ள , மக்களையும், எதிர்கால சந்ததியினரையும் கதிரியக்கப் பாதிப்பில் இருந்து பாதுகாக்க, செல்போன் கோபுரம் அமையவிடாமல் தடுத்து உத்தரவிடவேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai