சுடச்சுட

  

  திருச்செங்கோட்டில் மனுநீதி நாள் முகாம்:பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

  By திருச்செங்கோடு  |   Published on : 27th November 2014 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செங்கோடு அருகேயுள்ள மரப்பரை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 99 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

  இந்த முகாமுக்கு திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் சுமன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் குப்புசாமி வரவேற்றார். சமூக நலத் திட்ட வட்டாட்சியர் குணசேகரன், விவசாயிகள் சங்கத் தலைவர் சுந்தரம், மரப்பரை ஊராட்சித் தலைவர் விஜயன், ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் கிருஷ்ணன், மல்லசமுத்திரம் வேளாண் உதவி இயக்குநர் அன்பழகன், கவுன்சிலர்

  ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  இந்த முகாமில், தமிழக அரசு அமல்படுத்தும் திட்டங்கள் குறித்து வருவாய்க் கோட்டாட்சியர் சுமன் விளக்கிக் கூறினார். பின்னர், 99 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். கல்லூரி மாணவிகள் உள்பட 40 பேருக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.1.30 லட்சம் வழங்கப்பட்டது. 10 பேருக்கு புதிய குடும்ப அட்டையும், 2 பேருக்கு இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை தலா ரூ. 12,500ம், வேளாண் துறை சார்பில், சோளம் கிட் 2 பேருக்கும் , வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்கள் உள்பட 45 பேருக்கு பல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வருவாய் ஆய்வாளர் பழனிக்குமார் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai