சுடச்சுட

  

  பச்சைப்பாளி ஸ்ரீ விஜய விநாயகர் கோயில் மண்டல அபிஷேகம் நிறைவு

  By பரமத்தி வேலூர்  |   Published on : 27th November 2014 04:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்திவேலூர் வட்டம், கொந்தளம் அருகே உள்ள பச்சைப்பாளியில் புதிதாக எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஜய விநாயகர் கோயில் மண்டல அபிஷேக நிறைவு விழா அன்மையில் நடைபெற்றது.

  பச்சைப்பாளியில் புதிதாக எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஜய விநாயகர், ஸ்ரீ மலையாள சுவாமி, பரிவார தெய்வங்களாகிய விஷ்ணு துர்கை, தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பாலமுருகன் ஆகிய கடவுளர்களுக்கு கடந்த 10-ஆம் தேதி காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தக் கோயிலின் மண்டலாபிஷேகம் அன்மையில் நடைபெற்றது.

  இதை முன்னிட்டு, கணபதி ஹோமம், விநாயகர் வழிபாடு, சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும், 108 சங்காபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

  விழாவில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ விஜய விநாயகர் கோயில் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai