சுடச்சுட

    

    ஞானமணி கல்வி நிறுவனத்தின் ஞானோதயா இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா

    திங்கள்கிழமை நடைபெற்றது.

    இதில், கல்வி நிறுவனங்களின் தாளாளர் பி.மாலாலீனா குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். ஞானமணி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆரோக்கியசாமி வரவேற்புரை வழங்கினார். ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் தி.அரங்கண்ணல் தலைமை வகித்துப் பேசியது: குழந்தைகளிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, இதுபோன்ற விழா நடத்தப்படுகிறது. குழந்தைகள் முன்னேற்றமடையவும் கல்வியில் சிறப்படையவும் முக்கிய நோக்கமாகக் கொண்டு ஆசிரியர்கள் பணியாற்றிட வேண்டும் என்றார்.

    சிட்டி யூனியன் வங்கி நாமக்கல் கிளை மேலாளர் பாலசுப்பிரமணியன், ஞானோதயா பள்ளியின் இயக்குநர் சடகோபன், ஞானமணி கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர் கே.விவேகானந்தன், நிர்வாக அலுவலர் பி.பிரேம்குமார், தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் எஸ்.சந்திரசேகர், பொறியியல் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) அசோக் ராஜ்குமார், பள்ளியின் இயக்குநர் உஷா நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று, பேசினர். குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai