சுடச்சுட

  

  அரிமா சங்கம் சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சிப் பட்டறை அண்மையில் நடைபெற்றது.

  காக்காவேரி முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு அரிமா மாவட்டத் தலைவர் பி.மாணிக்கம் தலைமை வகித்தார்.

  ராசிபுரம் அரிமா சங்கச் செயலர் எம்.எஸ்.எஸ்.ரவிசுந்தரம், பி.மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கல்வி நிறுவனத் தலைவர் கே.பி.ராமசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முகாமைத் தொடக்கி வைத்துப் பேசினார்.

  இதில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைப் பாதுகாப்பு, கல்வி போதிப்புத் திறன், திறன் மேம்பாடு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.

  அரிமா மாவட்ட ஆளுநர் டி.ரவிச்சந்திரன், துணை ஆளுநர்கள் ஏ.சாதிக்பாட்சா, பி.மோகன், அரிமா சங்கத் தலைவர் கே.ராஜாராம், கல்லூரிச் செயலர் ஆர்.முத்துவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai