சுடச்சுட

    

    இன்று கால்நடை இனப்பெருக்க மருத்துவப் பரிசோதனை முகாம்

    By நாமக்கல்,  |   Published on : 28th November 2014 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் பசுக்கள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கான இனப்பெருக்க மருத்துவப் பரிசோதனை, குடல்புழு நீக்க முகாம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (நவ. 28 மற்றும் 29) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட

    செய்திக் குறிப்பு:

    விலையில்லாக் கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் 2011-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் 8 கிராமங்களைச் சேர்ந்த 400 பயனாளிகளுக்கு 400 கறவைப் பசுக்களும், 220 கிராமங்களில் 12 ஆயிரத்து 751 பயனாளிகளுக்கு 51 ஆயிரத்து 4 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.

    இதுவரையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆடுகள் 64 ஆயிரத்து 152 குட்டிகளை ஈன்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளின் பால் உற்பத்தித் திறனைப் பெருக்கவும், எடையை அதிகரிக்கவும் தேவையான இனப்பெருக்க மருத்துவப் பரிசோதனை, குடல்புழு நீக்க முகாம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (நவ. 28 மற்றும் 29)அந்தந்த கிராமங்களில் நடக்கிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai