சுடச்சுட

  

  ஓமலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

  வால்கரடு ஏரிக்கரை சண்முகம் மகன் தமிழ்ச்செல்வன் (30). இவருக்கு ரேவதி என்கிற மனைவியும், இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். தோட்டத்துக்கு மருந்து வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை தமிழ்ச்செல்வன் ஓமலூருக்குச் சென்றார். சேலம்-தருமபுரி பிரதானச் சாலையில் சென்றபோது, பெங்களூருவில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற கார், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

  இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai