சுடச்சுட

  

  நாமக்கல்லில் வரும் டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறும் மெகா லோக் அதாலத் முகாமில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிப்பது குறித்து நீதிபதிகள் ஆலோசனை நடத்தினர்.

  நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், பரமத்தி, திருச்செங்கோடு ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து குற்றவியல் நீதித்துறை நடுவர்கள், சார்பு நீதிபதிகள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம், நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் ராமதிலகம் தலைமை வகித்தார்.

  வரும் டிசம்பர் 6-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் மெகா லோக் அதாலத் நடைபெற உள்ளது.

  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளில் எவற்றை முடிக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, முடிக்க உத்தேசித்துள்ள வழக்குகளில் வழக்காடுபவர்களின் பிரச்னைகள், எவ்வளவு வழக்குகளைத் தீர்க்கமுடியும் என்பது குறித்து முதன்மை மாவட்ட நீதிபதிகள் மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தித் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். அனைத்து நீதிபதிகளும், நீதிமன்றங்களில் முடிக்க உள்ள வழக்குகள் குறித்துப் பேசினர்.

  மாநில அளவில் சிறந்த முறையில் அதிக வழக்குகளை முடிக்க நாமக்கல் மாவட்டம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என முதன்மை நீதிபதி ராமதிலகம் அறிவுறுத்தினார்.

  இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், நாமக்கல் சார்பு நீதிபதியுமான பாரி செய்திருந்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai