சுடச்சுட

    

    ராசிபுரம் அருகே நகராட்சி குப்பைக் கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

    ராசிபுரம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் காட்டூர் தட்டான்குட்டை ஏரியில் கொட்டப்படுகின்றன.

    இதனால் அங்கு அதிக அளவில் குப்பைகள் தேங்கியுள்ளன. குப்பைக் கிடங்கில் வியாழக்கிழமை எதிர்பாராவிதமாகத் தீப்பற்றியது.இதனால் அப்பகுதி புகை மண்டலமாகக் காட்சியளித்தது. புகையால் பாதிக்கப்பட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

    நகராட்சிப் பணியாளர்களும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து தீயை அணைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai