சுடச்சுட

    

    13 மாதங்களாகத் திறக்கப்படாத மாணவர் விடுதி

    By திருச்செங்கோடு,  |   Published on : 28th November 2014 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வசதிக் குறைவான வாடகைக் கட்டடத்தில் மாணவர்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், திருச்செங்கோட்டில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட மாணவர் விடுதி கடந்த 13 மாதங்களாகத் திறக்கப்படாமல் உள்ளது.

    திருச்செங்கோட்டில் மிக பிற்பட்டோர் நலத்துறை சார்பில் அரசு மாணவர் விடுதி வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 55 பேர் தங்கியுள்ளனர்.

    திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே வசதிகள் குறைந்த சிறிய தனியார் வாடகைக் கட்டடத்தில் கடந்த 8 ஆண்டுகளாக இவ்விடுதி இயங்கி வருகிறது. இதற்கு வாடகை ரூ.7000.

    இங்கு வார்டன், சமையலர் மற்றும் இரவுக் காவலர் ஆகிய மூவர் பணியில் உள்ளனர்.

    இங்குள்ள சிறிய அறையிலேயே அனைத்து மாணவர்களும் தங்கியாக வேண்டும். படிக்க, உறங்க, விளையாடத் தனியிடம் இல்லை.

    தமிழக அரசு சார்பில் ரூ.62.50 லட்சம் மதிப்பில் புதிய விடுதிக் கட்டடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை ஒட்டிக் கட்டப்பட்டுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட மாணவர் விடுதியின் அனைத்து வேலைகளும் நிறைவு பெற்றுக் கடந்த 13 மாதங்களாகப் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கட்டடத்தில் மாணவர்கள் உண்டு, உறங்க படிக்க, விளையாடத் தேவையான கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் உபயோகத்துக்கு விடாமல் பூட்டிக் கிடப்பதால் சுற்றிலும் முள் செடிகள் முளைத்து விஷ ஜந்துக்கள் நடமாட்டம் காணப்படுகிறது.

    இவ்வளவு செலவு செய்து கட்டப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட விடுதி, மாணவர்களின் பயன்பாட்டுக்கு விடப்படாமல் பூட்டிக் கிடக்கிறது. ஆனால் வசதிக்குறைவான வாடகைக் கட்டடத்தில் மாணவர்கள் தங்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் அவர்கள் படிப்பதற்கேற்ற நல்ல சூழல் அமையவில்லை.

    மிக பிற்பட்ட மாணவர்களும் கல்வி பயின்று சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற நல்ல திட்டம் நிறைவே

    றாத நிலை உள்ளது.

    மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய விடுதியைத் திறக்க வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai