சுடச்சுட

    

    குமாரபாளையம் இவானா அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் நாடாளுமன்றத்தின் வெள்ளி விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

    அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் தேவகி தலைமை வகித்தார். ஐ.நா. சபையின் பொதுக் குழுவில் குழந்தைகளின் மீதான உரிமை உடன்படிக்கை 1989-ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    இந்த உடன்படிக்கையில் இந்தியா 1992-ம் ஆண்டு கையெழுத்திட்டது.

    குழந்தைகளின் அவசியத் தேவைகள், உரிமைகள், சுதந்திரம் குறித்த தேவைகளுக்கு முதலிடம் அளிக்க இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த உடன்பாடு ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதைத் தொடர்ந்து இவானா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் குழந்தைகள் நாடாளுமன்றம் ஏற்படுத்தப்பட்டு, பிரதமராகத் தேர்வு பெற்ற தமிழரசன் தலைமையில் உறுப்பினர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai