Enable Javscript for better performance
பயிறு வகை சாகுபடிப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    விதை கிராமத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பயிறு வகை சாகுபடிப் பயிற்சி நடந்தது.

    நாமக்கல் வட்ட வேளாண் விரிவாக்க மையம் சார்பில், பயிறு வகைகளில் உயர் விளைச்சல் தொடர்பாக வேளாண் தொழில்நுட்பப் பயிற்சி உதவி இயக்குநர் மாயக்கிருஷ்ணன் தலைமையில் மரூர்பட்டியில் வியாழக்கிழமை நடந்தது.

    விவசாயிகளுக்குத் தேவையான சான்று விதைகளை, தாங்களே தங்களது நிலங்களில் உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். சான்று விதைகளை விதை நேர்த்தி செய்து, மண்ணாய்வுப் பரிந்துரைப்படி உரச்செலவைக் குறைக்க வேண்டும்.

    ஒருங்கிணைந்த முறையில் நீர்பாய்ச்சுதல், பயிர் பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    வட்டார வேளாண் அலுவலர் பேபிகலா, உயிரியல் கட்டுப்பாட்டு அலுவலர் ராணி, தொழில்நுட்ப மேலாளர் சுபத்ரா, உதவி விதை அலுவலர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai