சுடச்சுட

    

    வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிபொருள்கள் பறிமுதல்

    By நாமக்கல்  |   Published on : 29th November 2014 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி பொருள்களை கோட்டாட்சியர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தார்.

    நாமக்கல் அருகே விட்டமநாயக்கன்பட்டியில் வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

    நாமக்கல் கோட்டாட்சியர் காளிமுத்து, அப்பகுதியில் தோட்டமொன்றில் தனியாக இருந்த வீட்டைச் சோதனையிட்டார்.

    யாரும் இல்லாத அந்த வீட்டின் மூலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அதில் 5 ஜெலட்டின் குச்சிகள், 3 டெட்டனேட்டர்கள், 10 மீட்டர் திரி மற்றும் அரை கிலோ வெடிமருந்து ஆகியவை இருந்தது தெரிய வந்தது.

    நாமக்கல் காவல் நிலையத்தில் வெடி பொருள்கள் ஒப்படைக்கப்பட்டன.

    தலைமறைவாக உள்ள அந்த வீட்டின் உரிமையாளர் பழனிசாமியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai