சுடச்சுட

    

    பறவைக் காய்ச்சல் எதிரொலி காரணமாக குமாரபாளையம் பகுதிகளில் கோழி இறைச்சிக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் சனிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் குமாரபாளையம், வெப்படை, பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள கோழி மற்றும் இறைச்சிக் கடைகளில் பறவைக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    கோழி போன்ற பறவையினங்களை வெளிமாநிலங்களிலிருந்து வாங்கக் கூடாது. தேவைக்கேற்ப இறைச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். கோழிகளை உள்ளூரிலேயே வாங்கி உணவுக்குப் பயன்படுத்த வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் இறைச்சியை நீன்ட நேரம் வைத்து பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    நோய் தாக்கப்பட்ட, சந்தேகத்துக்கிடமான கோழி மற்றும் பறவையினங்களை உணவுக்குப் பயன்படுத்தக் கூடாது என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜா, முத்துசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai