சுடச்சுட

  

  நாமக்கல்லில் டிச. 2-இல் மகளிர் விளையாட்டுபோட்டிகள்

  By நாமக்கல்  |   Published on : 30th November 2014 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்ட அளவிலான மகளிர் விளையாட்டுப் போட்டிகள் வரும் டிசம்பர் 2, 3-ஆம் தேதிகளில் நடக்கிறது.

  மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2-ஆம் தேதி காலை தடகளம், கைப்பந்து, ஹாக்கி, கோ கோ போட்டிகளும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கபடி, வாலிபால், ஜிம்னாஸ்டிக் போட்டிகளும் நடைபெற உள்ளன.

  3-ஆம் தேதி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடைப்பந்து, ஆபீசர்ஸ் கிளப்பில் டென்னிஸ், பேட்மிண்டன், விக்டோரியா ஹாலில் மேசை பந்து போட்டிகளும் நடக்கின்றன. போட்டிகள் காலை 8.30 மணிக்கு தொடங்கும்.

  இப் போட்டியில் பங்கேற்க 31.12.2014 அன்று 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவியர், பணிபுரியும் மகளிரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

  போட்டியில் முதல் இடத்தை 3 இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிழ்கள் வழங்கப்படும்.

  முதல் பரிசாக ரூ.350, இரண்டாம் பரிசாக ரூ.250 மற்றும் முன்றாம் பரிசாக ரூ.150-ம் வழங்கப்படும். முதல் இடம் பெறும் அணியினர் மாநில அளவிலான போட்டியில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்வர் என மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai