சுடச்சுட

    

    நாமக்கல் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் ஆய்வு

    By நாமக்கல்,  |   Published on : 30th November 2014 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அண்மையில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு தீவிர கவனம் செலுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். தீவிர சிகிச்சைப் பிரிவு, மருத்துவக் கிடங்கு, மருந்துகள் வழங்கும் இடம், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை வார்டில் ஆய்வு மேற்கொண்ட அவர், தாய்மார்களிடம் முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என விசாரித்தார்.

    ஆய்வின் போது, தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி, நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர், மருத்துவப் பணிகள் துறை இயக்குநர் பி.சந்திரநாதன், மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி, என்ஐசியு ஒருங்கிணைப்பு அலுவலர் சீனிவாசன், நாமக்கல் நகர்மன்றத் தலைவர் இரா.கரிகாலன், சுகாதாரத் துறை இணை இயக்குநர் பி.வாசுகி, துணை இயக்குநர் இரா.ஜெமினி, அரசுத் தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெ.மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai