சுடச்சுட

  

  வங்கிகளில் கண்காணிப்பு கேமராக்கள்: போலீஸார் திடீர் ஆய்வு

  By பரமத்திவேலூர்,  |   Published on : 30th November 2014 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்திவேலூரில் உள்ள வங்கிகள், நிதி, காப்பீட்டு நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்புக் கருவிகள் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளனவா என, போலீஸார் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

  நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின்படி, பரமத்திவேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் உதயகுமார் பரிந்துரையின்படி, பரமத்திவேலூர் வட்டத்தில் உள்ள வங்கிகள்,காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் வேலூர் காவல் ஆய்வாளர் ரங்கசாமி தலைமையிலான போலீஸார், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா, அவை சரியான முறையில் இயங்குகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

  வேலூர் இந்தியன் வங்கியில் மேற்கொண்ட ஆய்வில், அந்த வங்கியின் மேலாளர் ஈஸ்வரமூர்த்தி, அபாய ஒலி எழுப்பும் கருவிகளையும், தீப் பற்றிக் கொள்ளும் போது ஏற்படும் அபாய ஒலி எழுப்பக் கூடிய இயந்திரத்தையும் இயக்கிக் காட்டினார்.

  அதிக அளவில் மக்கள் வந்து செல்லும் வங்கிகளில் தீப் பற்றிக் கொள்ளும் சமயங்களில், அபாய ஒலி எழுப்பும் வகையிலான சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதா, அவ்வாறு பொருத்தாத வங்கிகளுக்கு அந்தக் கருவிகளைப் பொருத்துவதின் அவசியம் குறித்து விளக்கினர்.

  அதி நவீன வசதிகள் கொண்ட செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பும்படியான கருவிகளைப் பொருத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

  பின்னர், காவல் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்துக்கு பரமத்திவேலூரில் உள்ள அனைத்து வங்கியினர், நிதி நிறுவனத்தினர், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai