Enable Javscript for better performance
அமில வீச்சில் பாதிக்கப்பட்டசெவிலியருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்- Dinamani

சுடச்சுட

    

    அமில வீச்சில் பாதிக்கப்பட்டசெவிலியருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

    By நாமக்கல்  |   Published on : 17th April 2015 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அமில வீச்சில் பாதிக்கப்பட்ட கிராம சுகாதார செவிலியருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே எலச்சிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கிராம சுகாதார செவிலியராகப் பணிபுரிந்து வந்தவர் விஜயகுமாரி (50). இவர் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி திருச்செங்கோடு - நாமக்கல் சாலையில் மாணிக்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரது முகத்தில் அமிலம் வீசினர்.

    இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அமிலம் வீசிய 2 பேர்களைக் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட விஜயகுமாரிக்கு, தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்டோர் நல நிதியின் கீழ் ரூ.3 லட்சம் வழங்க மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி, காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

    அதனை ஏற்று தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையை ஒதுக்கீடு செய்து, அதற்கான காசோலையை சிகிச்சை பெற்றுவரும் விஜயகுமாரியிடம் வழங்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai