Enable Javscript for better performance
ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர் பயிற்றுநர்களை, பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிமாறுதல் செய்யக்கோரி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அனைத்து வள மையப் பட்டதாரி ஆசிரியர் முன்னேற்றச் சங்க நாமக்கல் மாவட்டக் கிளையின் சார்பில், கோரிக்கை ஆர்ப்பாட்டம் நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

    சங்க மாவட்டத் தலைவர் மாங்கனி போராட்டத்துக்கு தலைமை வகித்தார். மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் வரவேற்றார். மாவட்டச் செயலர் செந்தில்குமரன், செல்வராஜு, சரவணமுத்து, செல்வக்குமார், மலர்க்கண்ணன், ராமு, பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

    மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பின்படி, 885 ஆசிரியர் பயிற்றுநர்களில் இந்த ஆண்டு 500 பேரை பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்ய வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் பணிபுரியக் கூடாது என்ற நடைமுறையினைத் திரும்பப் பெற வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai