Enable Javscript for better performance
கல்வி நிறுவனங்கள் சார்பில் 435 பேருக்கு பணி நியமன ஆணை- Dinamani

சுடச்சுட

    

    கல்வி நிறுவனங்கள் சார்பில் 435 பேருக்கு பணி நியமன ஆணை

    By நாமக்கல்  |   Published on : 17th April 2015 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எக்ஸல் கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்ட வளாகத் தேர்வில் தேர்வுபெற்ற 435 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு தினவிழா அண்மையில் நடைபெற்றது.

    விழாவுக்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் கெளரவத் தலைவர் ஏ.கே.நடேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் என்.மதன்கார்த்திக் வரவேற்றார்.

    கடந்த 2014-2015 கல்வியாண்டுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிப் பிரிவு அறிக்கையினை தொழிற்சாலை உறவுகள் மற்றும் ஆராய்ச்சித்திட்ட இயக்குநர் டி.தேவகுமார் வாசித்தார். எக்ஸல் பொறியியல் கல்லூரி முதல்வர் வி.கே.சண்முகநாதன், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஈ.பழனிச்சாமி, பிசினஸ் கல்லூரி முதல்வர் ஆர்.அமுதன் பேசினர்.

    இக் கல்வி நிறுவனங்களில், 81 முன்னணி நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு வளாகத் தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்ட 435 மாணவ, மாணவியருக்கு சென்னை அமேசான் இந்தியா மேம்பாட்டு மைய மென்பொருள் மேம்பாட்டுப் பிரிவு மேலாளர் மணிகண்டன் தங்க ரத்தினம், சென்னை இ-ஹெலியம் நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி தீபக் சுப்பிரமணியன் ஆகியோர் பணி நியமன ஆணையை வழங்கினர்.

    கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிப் பிரிவு இயக்குநர் ஜி.சம்பத் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai