Enable Javscript for better performance
காவிரியாற்றில் கரை ஒதுங்கிய மாணவரின் உடல் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    காவிரியாற்றில் கரை ஒதுங்கிய மாணவரின் உடல் மீட்பு

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 17th April 2015 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் அருகே கொந்தளம் காவிரியாற்றில் வியாழக்கிழமை கரை ஒதுங்கிய 9-ஆம் வகுப்பு மாணவரின் உடலை மீட்டு பரமத்தி வேலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தும்மிச்சம்பட்டியைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் சந்திரகுமார் (14). இவர் தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் பழனி தீர்த்தம் எடுத்துச் செல்வதற்காக ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூர் காவிரியாற்றுக்கு வந்துள்ளார். அப்பொழுது சந்திரகுமார் ஆழம் அதிகமான பகுதியில் சென்று குளித்ததில் காவிரியாற்றில் அடித்துச் செல்லப்பட்டார். எங்கு தேடியும் சந்திரகுமார் கிடைக்காததால் கொடுமுடி காவல் நிலையத்தில் அவரது தந்தை புகார் செய்தார்.

    இந்நிலையில், வியாழக்கிழமை கொந்தளம் காவிரியாற்றில் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக பரமத்தி வேலூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீஸார் சந்திரகுமாரின் உடலை மீட்டனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai