Enable Javscript for better performance
கையொப்பம் பெற பணம் பெற்றதாக புகார்: மேலும் ஓர் ஊழியர் இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    கையொப்பம் பெற பணம் பெற்றதாக புகார்: மேலும் ஓர் ஊழியர் இடமாற்றம்

    By நாமக்கல்,  |   Published on : 17th April 2015 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடும்ப அட்டையில் கையொப்பம் பெற பணம் பெற்றதாக எழுந்த புகாரில், மேலும் ஓர் ஊழியர் புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவில், நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தின் சார்பில் 29 பயனாளிகளுக்குப் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

    குடும்ப அட்டையில் கையொப்பம் பெற வட்ட வழங்கல் அலுவலகப் பணியாளர்கள், பயனாளிகளிடம் பணம் பெற்றதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து, நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அலுவலக உதவியாளர் பழனிவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாக தனி வட்டாட்சியர் ரத்தினம் ராசிபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக சாகுல் ஹமீது புதிய வட்ட வழங்கல் அலுவலராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இந்த சம்பவத்தில் நியாயவிலைக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சக்திவேல் என்பவர் மீது நல்லிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றிவந்த கோபி என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கொல்லிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிவந்த பெருமாள் நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai